நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தக்காளியின் விலை 80 ரூபாயைக் கடந்து விட்டது.
ஹைதராபாதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ பத்து ரூபாய்க்கு விற்ற தக்காளி இப்போது சந்தையில் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மொத்த வியாபாரிகள் கிலோவுக்கு பத்து ரூபாய் மட்டுமே லாபம் கிடைப்பதாகக் கூறுகின்றனர். தக்காளியுடன் வெங்காய விலையும் உயர்ந்து வருவதால் விற்பனை குறைந்துள்ளது