தள்ளிப்போகும் விக்ரமின் கோப்ரா ரிலீஸ்
நடிகர் விக்ரம் ஏகப்பட்ட கெட்டப்புகளில் நடித்து முடித்துள்ள படம் 'கோப்ரா'. 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. இந்த மாதமே இப்படம் வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து சமீபத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் தயாரிப்பு வேலைகள் திட்டமிட்டபடி முடிக்க முடியாததால் படத்தை ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.