பாங்காக்: தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தாமஸ் கோப்பை பேட்மிண்டன் கோப்பையை வென்று வரலாற்று சாதனை இந்திய அணி படைத்துள்ளது. இறுதி போட்டியில் இந்தோனேசியா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது இந்திய அணி. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.