தாய்லாந்தில் நடைபெற்று வந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இந்தோனேசிய அணியை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டியில் சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சரித்திரம் படைத்த இந்திய பேட்மிண்டன் அணி! தாமஸ் கோப்பையை இந்தியா வென்றதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது! நம் திறமையான குழுவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி எதிர்காலத்தில் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. தாமஸ் கோப்பை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு ரூ.1 கோடி பரிசு- விளையாட்டுத் துறை அறிவிப்பு