சென்னை: இன்று முதல் மே 17-ம் தேதி வரை மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதியில் பலத்த கற்று வீசக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் மே 17 வரை பலத்த கற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்குவதால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.