தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் டெம்போ வாகனம் ஏறி இறங்கியதில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம், சிசிடிவியில் பதிவாகியுள்ளது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வீரபாண்டி கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.
அனுமந்தன்பட்டி பகுதியில் அவர்கள் சென்றபோது சாலையோரம் நின்ற கார் ஒன்றின் கதவு திறக்கப்பட்டதாகவும், அது அவர்கள் மீது இடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், குமரேசன் நிலைதடுமாறி சாலையில் குடும்பத்துடன் கீழே விழுந்த நிலையில், அவர்களுக்கு பின்னால் வந்த டெம்போ வாகனம் அவரது மனைவி மற்றும் மகள் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.