திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திரிபுராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திடீரென பிப்லப் தேவ் ராஜினாமா செய்துள்ளார். தேர்தலையொட்டி கட்சிப்பணிகளில் ஈடுபடுவதற்காக பதவி விலகியதாக பிப்லப் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாக திரிபுராவில் முதலமைச்சர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் பலர் பிப்லபுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில் இம்மாற்றத்தை கட்சித் தலைமை செய்துள்ளது. பல் மருத்துவரான மாணிக் சாஹா கடந்த மாதம்தான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இதையும் படிக்கலாம்: மத்தியபிரதேசம்: 3 போலீசாரை சுட்டுக் கொன்ற மான் வேட்டைக்காரர்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM