நாளைய தினம் ஆயிரக்கணக்கான பொலிஸார் கொழும்பு நகரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
விசேட கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இம்மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விசேட கடமைகளுக்காக இந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.