நீதிமன்றத்தில் மனுதாரர்கள் அமைதி கொள்ளும்படி நீதிபதிகள் நடந்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
நீதித்துறை கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர் மாவட்ட நீதிமன்றங்கள் வாடகைக் கட்டடங்களில் போதுமான வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதாகக் கூறினார்.
ஸ்ரீநகரில் நீதிபதிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தலைமை நீதிபதி மனு தாக்கல் செய்பவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுகிறார்கள் அவர்கள் தாக்கல் செய்யும் மனுக்கள் மீதான சட்டம் குறித்தும் அதன் செலவு குறித்தும் அறியாமல் தவிப்பில் இருப்பார்கள். அவர்களை அமைதிப்படுத்துங்கள் என்று நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.