மே 20ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
கொரோனோ பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஊட்டி மலர் கண்காட்சி இந்த வருடம் மே 20ஆம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நீலகிரியில் இந்த வருடம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்த வண்ணம் இருக்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட இருக்கின்றன.
இந்நிலையில் மலர் கண்காட்சி மே 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 5 நாட்கள் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் 275 ரகங்களில் 5.5 லட்சம் மலர் செடிகள் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேலும் இக்கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் மே 20-ஆம் தேதி துவக்கி வைக்க உள்ளார். இதனையடுத்து கண்காட்சி நடைபெறும் மே 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்றும் அதனை ஈடுகட்ட ஜூன் 4-ஆம் தேதி வேலை நாளாக இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.