நெல்லையில் தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேரை மீட்க முடியாமல் திணறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. அங்கு தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது நள்ளிரவு திடீரென மண்சரிவு ஏற்பட்டது. 6 தொழிலாளர்கள் பாறைகள் மற்றும் கற்குவியலுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் நள்ளிரவு முதல் கிரேன் மூலம் பாறைகளை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கயிறு மூலம் இதுவரை இரண்டு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கற்குவியல் மற்றும் வாகனத்திற்கு இடையில் சிக்கி பல மணி நேரமாக உயிருக்கு போராடி வரும் நபரை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. அவரை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அது சாத்தியப்படாததால் ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது. இதனிடையே, மேலும் 3 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இதனிடையே, மீட்புப் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் நெல்லை சரக டிஐஜி பரவேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையும் படிக்கலாம்: பயணி தாக்கி உயிரிழந்த நடத்துநர் உடலுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரில் அஞ்சலி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM