பாரதிய லேபர் யூனியன் பொதுக்குழு கூட்டம்| Dinamalar

புதுச்சேரி : பாரதிய லேபர் யூனியன் தலைவராக செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி மாநில பாரதிய லேபர் யூனியன் பொதுக்குழுக் கூட்டம் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. மூத்த தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், அரசு ஊழியர் சம்மேளன தலைவர் பாலமோகனன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.தொடர்ந்து, கடந்த ஆட்சியில் மூடப்பட்ட மூன்று பஞ்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களின் துயர் துடைக்க ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கவர்னர், முதல்வர் மற்றும் தொழில் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.பாரதிய மஸ்துார் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கணேசனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மேலும், பாரதிய லேபர் யூனியன் தலைவராக இருந்த பச்சையப்பன் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதிய தலைவராக செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.