நேபாளத்துடனான இந்தியாவின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். லும்பினியில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவையும் சந்தித்து பேச உள்ளார்.
இந்த சுற்றுப்பயணம் குறித்து தெரிவித்த பிரதமர் மோடி, நேபாளத்துடனான இந்தியாவின் நட்புறவு இணையற்றது என்றும் இருநாடுகளுக்கும் இடையிலான நாகரீகம் மற்றும் மக்கள் தொடர்புகள் ஆகியவை நெருங்கிய நட்புறவின் நீடித்த அம்சம் என்றும் கூறினார்.