சென்னை தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து 2 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் இரு முக்கிய குற்றவாளிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை தி.நகரில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு, M.R.Garden service நிறுவன உரிமையாளர்கள் என கூறி ரவி, மஞ்சு உள்ளிட்டோர் கடன் பெற்று, அதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடத்தின் ஆவணத்தை அடமானம் வைத்துள்ளனர்.
அந்த ஆவணத்தை சரிபார்த்த போது போலியானவை என தெரியவந்ததையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.