ஜெய்ப்பூர்:
கடந்த மே 9-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் மந்திரி மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷி மீது டெல்லி காவல்துறையிடம் 23 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அந்த பெண் மந்திரியின் மகனை ஜெய்ப்பூரில் சந்தித்தாகவும், அவர் பெண்ணுக்கு மது கலந்துகொடுத்து நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி மிரட்டியதாகவும் கூறினார்.
மேலும் கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை பலமுறை தன்னை பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து ரோஹித் ஜோஷி மீது கற்பழிப்பு, போதை மருந்துகளால் காயப்படுத்துதல், கருச்சிதைவு ஏற்படுத்துதல், இயற்கைக்கு மாறான குற்றங்கள், கிரிமினல் மிரட்டல் மற்றும் மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வடக்கு டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் ஜெய்ப்பூரில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மந்திரிக்கு சொந்தமான 2 வீடுகளில் ரோகித் சோஷியை தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை.
இதையடுத்து ரோகித் ஜோஷி மே 18-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீஸை மந்திரியின் வீடுகளில் ஒட்டிவிட்டு வந்தனர்.