மனைவிக்கு கனேடிய விசா விண்ணப்பத்தை இறுதி செய்யும் பணியில் இருந்தார்! திருமணமான 3 மாதத்தில் இறந்த இலங்கை தமிழர்.. புதிய தகவல்


கனடாவில் சாலை விபத்தில் இலங்கை தமிழர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவருக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது.
இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி இரவு 9.15 மணிக்கு சுரேஷ் உணவகத்தில் இருந்து வெளியே வந்து தனது tractor trailer வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது டிக்ஸி சாலைக்கு மேற்கே உள்ள டன்டாஸ் தெருவின் குறுக்கே தெற்குத் திசையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது, காரில் இருந்த ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

மனைவிக்கு கனேடிய விசா விண்ணப்பத்தை இறுதி செய்யும் பணியில் இருந்தார்! திருமணமான 3 மாதத்தில் இறந்த இலங்கை தமிழர்.. புதிய தகவல்

இதையடுத்து படுகாயமடைந்த சுரேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 24ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், சுரேஷ் மீது விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோ பகுதியை சேர்ந்த 38 வயதான Luke Conklin என்பவர் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி பிராம்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உயிரிழந்த சுரேஷ் குடும்பத்தார் தெரிவிக்கையில், சுரேஷுக்கு இலங்கையில் திருமணம் நடைபெற்றது.
தனது மனைவிக்கு விசா விண்ணப்பத்தை இறுதி செய்யும் பணியில் சுரேஷ் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்த சமயத்திலேயே அவர் உயிரிழந்தார் என சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.  

மனைவிக்கு கனேடிய விசா விண்ணப்பத்தை இறுதி செய்யும் பணியில் இருந்தார்! திருமணமான 3 மாதத்தில் இறந்த இலங்கை தமிழர்.. புதிய தகவல்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.