உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்யா வீசிய குண்டில் எழுதப்பட்டிருந்த வாசகம் தொடர்பில் வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் Kalush இசைக்குழுவின் புதிய பாடல் இந்த ஆண்டுக்கான Eurovision பாடல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், ஐரோப்பிய நாடுகள் இன்னும் உதவ முன்வர வேண்டும் எனவும் துறைமுக நகரமான மரியுபோலில் சிக்கியுள்ள வீரர்களை மீட்க உதவ வேண்டும் எனவும் குறித்த இசைக்குழுவினர் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், ஞாயிறு பகல் குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kalush இசைக்குழு விடுத்த கோரிக்கையை கேலி செய்யும் வகையில், மரியுபோல் நகரில் வீசிய குண்டில் ரஷ்ய துருப்புகள் வாசகங்களை எழுதியிருந்தனர்.
அடுத்த ஆண்டு மரியுபோல் நகரில் Eurovision நிகழ்ச்சி முன்னெடுக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதி அளித்ததன் சில மணி நேரங்களில் ரஷ்ய துருப்புகள் சில்லிட வைக்கும் வாசகங்களுடன் குண்டுகளை வீசியுள்ளனர்.
Kalush இசைக்குழுவினரே, நீங்கள் கேட்டதற்காகவே, Azovstal இரும்பாலைக்காக என அந்த வெடிகுண்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
மரியுபோல் நகர மேயரின் முதன்மை ஆலோசகரே குறித்த புகைப்படங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும், புடினின் படைகள் மனிதாபிமானத்தை இழந்துவிட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Azovstal இரும்பாலை மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. மரியுபோல் நகரில் தற்போது Azovstal இரும்பாலை மட்டுமே உக்ரைன் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு நடந்த யூரோவிஷன் பாடல் போட்டியில் உக்ரைனின் கலுஷ் இசைக்குழு 631 புள்ளிகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.
466 புள்ளிகளுடன் பிரித்தானியா வியக்கத்தக்க வகையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
ஸ்பெயின் 459 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் ஸ்வீடன் 438 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் பிடித்தது.
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு மத்தியில் நகரத்தின் பெரும்பகுதி மொத்தமாக சேதமடைந்துள்ள நிலையில் இருந்த போதிலும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெற்றியைப் பாராட்டி, அடுத்த ஆண்டு போட்டியை மரியுபோலில் நடத்துவதாக உறுதியளித்தார்.