மரியுபோலின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மீது ரஷ்ய ராணுவம் தீ கனல்களை தெளிக்கும் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி இருப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது மூன்று மாதங்களாக தொடரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியான மரியுபோலை ரஷ்ய ராணுவம் பல வார முற்றுகை மற்றும் தாக்குதலுக்கு பிறகு தனது கட்டிபாட்டுக்குள் கொண்டுவந்தது.
இருப்பினும், ஆயிரக்கணக்கான உக்ரைன் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மரியுபோல் நகரின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கி இருந்ததையடுத்து, ரஷ்ய ராணுவம் அந்த ஆலையை மட்டும் கைப்பற்ற முடியாமல் அதனை சுற்றி வளைத்து இன்று வரை தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைன் போரின் 81வது நாளான இன்று ரஷ்ய ராணுவம் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையின் மீது தீ கனல்களை தெளிக்கும் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்னெடுத்த பாதுகாப்பு மீட்பு நடவடிக்கையினால் பெரும்பாலான பொதுமக்கள் ஆலையில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட நிலையில் ரஷ்ய ராணுவம் இத்தகைய தீ குண்டுகளை பொழியும் பாஸ்பரஸ் குண்டு தாக்குதலை ரஷ்ய ராணுவம் நடத்தியுள்ளது.
பல்வேறு வகையான ஏவுகணை தாக்குதலால் நிலைகுலைந்த இடிபாடுகளுடன் காணப்படும் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மீது ரஷ்ய ராணுவம் 9M22S என்று அழைக்கப்படும் பாஸ்பரஸ் குண்டுகள் கொண்டு தீ மழை தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சூப்பர்மார்கெட்டில் இராணுவ சீருடையில் வந்த நபர் திடீர் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலியான சோகம்
இரும்பு ஆலையில் கடைசியாக சிக்கி இருக்கும் உக்ரைன் ராணுவ வீரரின் மனைவி மற்றும் தாய், இதுத்தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டு போர் முடிவுக்கு வருமா என அஞ்வதாக தெரிவித்துள்ளார்.