இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், சிறிய மளிகை மற்றும் உணவு அல்லாத பிராண்டுகளை கொண்ட dozens நிறுவனத்தினை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் தனது சில்லறை வர்த்தக பிரிவினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் ஆன்லைன், ஆஃப்லைனில் விரிவாக்கம் செய்யும் பொருட்டு பல்வேறு நிறுவனங்களையும், ப்லவேறு பிராண்டுகளையும் கையகப்படுத்தி வருகின்றது.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடு விலை அதிகரிக்கலாம்.. எவ்வளவு தெரியுமா?
மெகா திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் 50 – 60 மளிகை, வீட்டுக்கு தேவையான பொருட்கள், பர்சனல் கேர் உள்ளிட்ட பல பிராண்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தான் பல்வேறு பிராண்டுகளைடும் தொடர்ந்து கையகப்படுத்தி வருகின்றது.
தொடர்ந்து விரிவாக்கம்
இந்த கையகப்படுத்தல் மூலம் ரிலையன்ஸ் ரீடெயில் பெயரில் நுகர்வோருக்கு தேவையான பொருட்கள் விற்பனை செயப்படும். மேலும் தொடர்ந்து வணிகத்தினை விரிவாக்கம் செய்யும், இது ஆஃப் லைன் மற்றும் ஆன்லைனில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெயில் இலக்கு
இதற்கிடையில் ரிலையன்ஸ் சுமார் 30 பிரபலமான உள்ளூர் பிராண்டுகளை கையகப்படுத்தலாம் அல்லது கூட்டு முயற்சிக்காகவும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இவற்றில் பல இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு என்ன என்பது எதுவும் தெளிவாக தெரியவில்லை. எனினும் இந்த முயற்சியின் மத்தியில் ரிலையன்ஸ் ரீடெயில் வணிகத்தின் மொத்த விற்பனை இலக்கு, 5 ஆண்டுகளுக்குள் 500 பில்லியன் ரூபாயாக இருக்கும் என கணித்துள்ளது.
சவால் விடும் ரிலையன்ஸ்
இந்த புதிய வணிக திட்டத்தின் மூலம் பல வருடங்களாகவே இயங்கி வரும் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பெப்சிகோ இன்க், கோகோ கோலா போன்ற பல உலகின் மிகப்பெரிய குழுக்களோடு சவால்விட விரும்புகிறது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் விற்பனையானது மார்ச் 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 6.5 பில்லியன் டாலர் மதிப்பில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 10 இந்திய குடும்பங்களில் 9 குடும்பங்களில் இதன் பிராண்டுகளில் ஒன்றையாவது பயன்படுத்துகின்றனராம்.
Reliance industries plans to buy dozens of brands in $6.5 billion
Mukesh Ambani’s Reliance Industries planning to acquire dozens of companies.