பெங்களூரு : மெட்ரோ ரயில் பாதைக்காக, சுரங்கம் தோண்டும் போது, பாறை சிக்கியதால் பழுதடைந்த ‘லவி’ இயந்திரம், சரி செய்யப்பட்டு மீண்டும் பணியை துவங்கியது.பெங்களூரின் காளேன அக்ரஹாரா — நாகவாரா இடையே, 21.25 கி.மீ., தொலைவிலான மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது.
இதில் 13.92 கி.மீ., சுரங்கப்பாதையாகும். ஒன்பது இயந்திரங்கள், சுரங்கம் தோண்டும்பணியில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சிவாஜிநகரிலிருந்து, எம்.ஜி.சாலை வரை ‘லவி’ இயந்திரம், 2021 பிப்ரவரி 16ல், சுரங்கம் தோண்டும் பணியை துவங்கியது. 1,086 மீட்டர் சுரங்கம் தோண்ட, இந்த இயந்திரம் 14 மாதம் எடுத்துக்கொண்டது. இப்பாதையில் செயல்படும் போது, கடினமான பாறைக்கற்கள் எதிர்க்கொண்டது. இதனால் அவ்வப்போது பணிக்கு இடையூறு ஏற்பட்டது.
இயந்திரத்தின் கட்டர் ஹெட், டிஸ்க்கள் பழுதடைந்தது. பணிகளும் இரண்டு மாதங்கள் தாமதமானது.அதன்பின் நான்கு ‘ஹைட்ராலிக் ஜாக்’ குகள் பயன்படுத்தி, 350 டன் எடை கொண்ட சுரங்க இயந்திரத்தை, எம்.ஜி.சாலை மெட்ரோ நிலையத்தின், வடக்கு நுனியிலிருந்து, தெற்கு நுனிக்கு கொண்டு வந்து, பழுது பார்க்கப்பட்டது. இயந்திரத்தின் கட்டர் ஹெட்கள் மாற்றுவது உட்பட, மற்ற பழுதுகள் சரி செய்யப்பட்டது. தற்போது பணிகள் முடிந்ததால், ‘லவி’ இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை துவங்கியுள்ளது.
Advertisement