மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் போட்டியிடும் 4 இடங்களில் 1 இடம் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியானதைத் தொடர்ந்து, ஜூன் 10ம் தேதி 6 ராஜய சபா எம்.பி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், திமுக சார்பில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில், தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “2022 ஜூன் 10 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக 1. தஞ்சை சு. கல்யாணசுந்தரம், 2. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், 3. இரா. கிரிராஜன் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“