நாட்டில் விவசாயிகளிடம் இருந்து கோதுமை கொள்முதல் செய்வது மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அவர், புவிசார் அரசியல் சூழல் மற்றும் சந்தை விலை ஆகியவை கோதுமை கொள்முதலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கூறினார்.
இதன் காரணமாக, விவசாயிகளின் நலன் கருதி, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் காலத்தை நீட்டித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு விவசாயியும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க, மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.