கேரள மாநிம்ல மலப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் சசிகுமார். அதன் பின்னர் அவர் அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.
சமீபத்தில் பணி ஓய்வுபெற்ற இவர், இந்த தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு தங்களுடைய ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்ற ரீதியில் அவருடைய நண்பர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் சசிகுமாருக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.
நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வந்த சசிகுமாருக்கு பேரிடியாக ஒரு தகவல் வந்தது. அவரிடம் பயின்ற மாணவர் ஒருவர், சசிகுமார் ஆசிரியராக பணியாற்றியபோது பல மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை சமூகவலை தளத்தில் பதிவிட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவனின் இந்த பதிவு மாநிலம் முழுவதும் சோஷியல் மீடியாவில் காட்டுத் தீ போல் பரவியது. உடனே இதுகுறித்து விசாரணை நடத்த மாநில கல்வித் துறை அமைசசர் சிவன்குட்டி உத்தரவிட்டார். விசாரணையில் சசிகுமார் ஆசிரியராக பணிபுரிந்த 30 ஆண்டு காலத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த மலப்புரம் போலீசார், சசிகுமாரை கைது செய்தனர். சமூக வலைதளம் மூலம் ஆசிரியரின் யோகிதை வெளிவர தொடங்கியதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியர் தற்போது புகார் அளிக்கத் துவங்கியுள்ளனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.