மேலும் நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் டீசல் எரிபொருளை 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்ட மற்றுமொரு கப்பல் இன்று இலங்கை வந்துள்ளது.
இந்திய கடனுதவியுடன் எரிபொருள் கொண்டு வரும் 12வது கப்பல் இதுவாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் இந்த கப்பலில் இருந்து டீசலை தரையிறக்கம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளன.
இதேவேளை, எரிபொருளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது. மேலும் எதிர்வரும் 29ஆம் திகதி மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது.. ஒக்டெய்ன் 92 மற்றும் ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் வகைகளை கொண்ட எரிபொருளே இந்தக் கப்பலில் கொண்டுவரப்படவுள்ளன.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகம் இன்று (15) மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.