Starlink Broadband: 32 நாடுகளில் தடம் பதித்த ஸ்டார்லிங்க் – இந்தியாவுக்கு எப்போது?

ட்விட்டரை வாங்கிய உலக பணக்காரர்களின் ஒருவரான டெஸ்லா நிறுவனர்
எலான் மஸ்க்
,
SpaceX
எனும் விண்வெளி ஆய்வு மையத்தையும் நடத்தி வருகிறார். இதன்மூலம் பல சேவைகளை அளிக்க நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக,
Starlink
எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டது. புவியின் தாழ்வான வட்டப்பாதையில் சிறிய செயற்கைக்கோள்களை நிறுவி, அதன்மூலம் இன்டர்நெட் சேவை வழங்குவதே இந்த நிறுவனத்தின் திட்டம். பல ஆயிரம் செயற்கைக்கோள்களை நிறுவி, தற்போது
ஸ்டார்லிங்
பிராட்பேண்ட் சேவை 32 நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்பாட்டில் உள்ளது.

இதற்கு போட்டியாக அமேசான் நிறுவனத்தின் தரப்பில் இருந்து “Project Kuiper” திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், எலான் மஸ்க் நிர்வகிக்கும் ஸ்டார்லிங் நிறுவனம் பயனர்களுக்கு பல சலுகைகளுடன் சேவைகளை நிறுவி வருகிறது. இதுவே, நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

TikTok: விண்வெளியில் டிக்டாக் வெளியிட்ட பெண் – வைரல் வீடியோ!

எங்கெல்லாம் ஸ்டார்லிங் சேவை கிடைக்கிறது

ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங் சேவையின் ஒட்டுமொத்த கவரேஜைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதன்படி, ஸ்டார்லிங்க் சேவை ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் சில பகுதிகளில் கிடைக்கிறது.

மேலும் சந்தையைக் கைப்பற்றுவதில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஸ்டார்லிங்க் 2023 ஆம் ஆண்டிற்குள் முழு ஆப்பிரிக்க கண்டத்திலும் நுழையப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, இந்தியாவிலும் ஸ்டார்லிங் சேவைக்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.

Elon Musk Tweet: ‘நான் மர்மமான முறையில் இறந்தால் …’ – எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி ட்வீட்!

இந்தியாவில் ஸ்டார்லிங்

இதுவரை மொத்தம் 2,000க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை ஸ்டார்லிங் சேவைக்காக
ஸ்பேஸ் எக்ஸ்
விண்ணில் செலுத்தியுள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியா நீல நிற குறியீட்டுடன் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் ஏற்கனவே ஸ்டார்லிங் பிராட்பேண்ட் சேவைக்காக நிறுவனம் பதிவு செய்துவிட்டது. அடுத்தகட்ட பணிகள் நடந்துவரும் வேளையில், விரைவில் அதன் சேவை இந்திய பயனர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Satellite Internet: ஸ்பேஸ் எக்ஸ்-க்கு போட்டியாக களமிறங்கும் அமேசான் புராஜக்ட் குயிப்பர்!

ஸ்டார்லிங் இணையத்தின் வேகம் (Starlink Data Speed)

இணைய வசதி கிடைக்காத தொலைதூரப் பகுதிகளுக்கு இன்டர்நெட் வசதி வழங்குவதே ஸ்டார்லிங் நிறுவனத்தின் பிரதான திட்டம். 2021ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், அமெரிக்காவில் ஸ்டார்லிங் சேட்டிலைட் பிராட்பேண்ட் இன்டர்நெட்டின் பதிவிறக்க வேகம் (Download Speed) 104.97Mbps ஆகவும், அதன் பதிவேற்ற வேகம் (Upload Speed) 12.04Mbps ஆகவும் இருந்தது.

இது அமெரிக்காவில் உள்ள நிலையான நெட்வொர்க் வேகத்துடன் கிட்டத்தட்ட ஒத்ததாக உள்ளது. நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, SpaceX செயற்கைக்கோள்கள் மற்றும் தரை நிலையங்களை இன்னும் இந்த சேவையில் கூடுதலாக இணைக்க உள்ளது.

கெத்து காட்டும் Elon Musk – உக்ரைனுக்கு Starlink இண்டர்நெட் ரெடி… அதிர்ச்சியடைந்த ரஷ்யா!

இதனால் நெட்வொர்க்கின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கும். நிலையான ஆப்டிக் ஃபைபர் இணைய வேகத்தை விட குறைந்ததாக இருந்தாலும், கேபிள்கள் கொடுக்கமுடியாத இடங்களில் கூட, வேகமான இணைய இணைப்பை பயனர்கள் ஸ்டார்லிங் சேவை மூலம் ருசிக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

ஸ்டார்லிங் சேவையின் கட்டண விவரங்கள் (Starlink Broadband Price)

விலையைப் பொருத்தவரை, சிலர் இது ஒரு மலிவு சேவை என்று நினைக்கிறார்கள். மார்ச் மாதத்தில், நிறுவனம் அதன் திட்டங்களுக்கான விலைகளை அதிகரித்தது. உதாரணமாக, புதிய ஸ்டார்லிங்க் ஸ்டார்டர் கிட் $599க்கு முன்பணமாக செலுத்த வேண்டும். இந்திய மதிப்பில் இது சுமார் 45,000 ரூபாயாக இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

இதில் சேட்டிலைட் டிஷ், ஸ்டாண்ட், பவர் சப்ளை மற்றும் வைஃபை ரூட்டர் ஆகியவை அடங்கும். இணைய சேவைக்கான மாதாந்திர கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,000 ($110 டாலர்) ஆக உள்ளது. இது முன்பு $99 டாலராக இருந்தது. வெளியே செல்லும்போது ஸ்டார்லிங் சேவையைப் பயன்படுத்தவும் புதிய கிட் வழங்கப்படுகிறது. இதற்காக மாத சந்தாவாக $25 டாலர் வசூலிக்கப்படுகிறது.

மேலதிக செய்திகள்:

Android 13: ஆண்ட்ராய்டு 13இல் கிடைக்கும் 10 முக்கிய அம்சங்கள்!Google I/O 2022: பிக்சல் வாட்ச், பிக்சல் 6A, பிக்சல் பட்ஸ் என நிறைய இருக்கு – கூகுள் நிகழ்வு ஹைலைட்ஸ்!Jio 5G: ஜியோ 5ஜி வேகம் என்ன தெரியுமா மக்களே!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.