உக்ரைன் மீதான ரஷ்யப் போரின் எதிரொலியாகவும், பக்கவிளைவாகவும் உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. அதன் ஒரு விளைவாக, உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் கவலை கொள்ள செய்திருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இதற்கு G7 அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கோதுமையின் சர்வதேச விலையில் சமீபத்திய ஏற்றமானது, கோதுமை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு அதிக லாபத்தை தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உணவு நெருக்கடி ஏற்படவும், உலக உணவு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுக்கும் ரஷ்யாதான் காரணம் என்று ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், ரஷ்ய அதிபர் அதிபர் விளாடிமிர் புடின் மீது குற்றம் சாட்டுகிறார்.
மேலும் படிக்க | இந்தியா-UAE தடையற்ற வாணிப ஒப்பந்தம் MSME துறைக்கு ஊக்கம் அளிக்கும்
இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்ததற்கு, G7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த முடிவு உணவு நெருக்கடியை மோசமாக்கும் என்று ஜெர்மன் நாட்டின் விவசாய அமைச்சர் செம் ஓஸ்டெமிர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கோதுமை ஏற்றுமதிக்கான தடையானது, சர்வதேச அளவில் கோதுமையின் விலை உயர்வுக்கு காரணமாக மாறியுள்ளதாக ஜெர்மன் அரசு கூறுகிறது.
சர்வதேச அளவில் முக்கிய கோதுமை உற்பத்தியாளராக இருக்கும் உக்ரைன், தன் மீது தொடுக்கப்பட்டுள்ள போரால், உற்பத்தியைத் தொடர முடியாமல் போனதால், அந்நாட்டின் கோதுமை ஏற்றுமதி சரிந்துள்ளது.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்
எனவே, உலக உணவு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுக்கு ரஷ்யாதான் காரணம் என்று அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் எதிர்கொள்ளும் இந்த உணவுப் பற்றாக்குறைக்கு ரஷ்யா தான் பொறுப்பு என்றும் ஜெர்மன் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடை குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் விவசாய அமைச்சர் செம் ஓஸ்டெமிர்,”அனைவரும் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினால் அல்லது உலகத்திர்கான தங்களது சந்தைகளை மூடினால், அது உணவு நெருக்கடியை மோசமாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தடுப்பூசிக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் கல்தா கொடுக்கும் ஓமிக்ரான் மாறுபாடுகள்
“G20 நாடுகளின் உறுப்பினராக இருக்கும், இந்தியா, உலகத்திற்கான தனது கடப்பாடுகளையும், பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டின் போது, இந்த விவகாரம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
“கோதுமை மீதான ஏற்றுமதித் தடை வங்காளதேசம், நேபாளம் போன்ற நாடுகளை பாதிக்கிறது. இந்த விவகாரம் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய ஒன்று. G7 நாடுகளின் கூட்டத்தில் இந்த பிரச்சினையில் உறுதியான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்,” என ஜெர்மன் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
கோதுமைத் தடை மீதான இந்திய அரசின் முடிவுக்கு பின்னால், உள்நாட்டு சந்தைகளில் கோதுமை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் படிக்க | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபா மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு
எனவே, “உணவு பாதுகாப்புத் தேவைகளை” பூர்த்தி செய்வதற்காக பொருட்களைக் கோரும் நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் எரிபொருள், தொழிலாளர் மற்றும் போக்குவரத்து செலவுகள் இந்தியாவில் கோதுமை விலையை மேலும் உயர்த்தியுள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியா 7 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 250 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
கடந்த மாதம் மட்டும் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 1.4 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYe