ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தை கைப்பற்றிய உதயநிதி: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது படக்குழு.

‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’, ‘டெடி’ படங்களுக்குப் பிறகு சக்தி சௌந்தர்ராஜனுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் ஆர்யா. பிரபல ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்களை அடிப்படையாக எடுத்துக்கொண்டு, தமிழில் திரைப்படங்களை உருவாக்கி வெற்றி அடைந்து வருகிறார் சக்தி சௌந்தர்ராஜன். அந்த வகையில், தற்போது ‘கேப்டன்’ படமும் அமைந்துள்ளது.‘மிருதன்’ திரைப்படத்தில் ஜாம்பி, ‘டிக் டிக் டிக்’ படத்தில் விண்வெளிப்பயணம் என வித்தியாசமான கதைக் களத்தை கையாண்ட சக்தி சௌந்தர்ராஜன், ‘கேப்டன்’ படத்தில் வித்தியாசமான விலங்கு கொண்ட கதையை கையில் எடுத்துள்ளார்.

image

இந்தப்படத்தில், சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார்.

ஆர்யாவின் தி ஷோ பீபிள் நிறுவனமும், திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், ‘கேப்டன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதனை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி ‘கேப்டன்’ தியேட்டர்களில் வெளியாகிறது என்று அறிவித்துள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.