இந்தியாவில் ஒரே மாதத்தில் 88 லட்சம் வேலைவாய்ப்புகள்.. CMIE தகவல்!

இந்தியாவில் கொரோனாவால் பலர் வேலைவாய்ப்பினை இழந்து வந்த நிலையில், ஏப்ரல் மாதம் 88 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகியுள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.

2021-2022 நிதியாண்டில் இந்தியாவில் சராசரி மாதாந்திர வேலைவாய்ப்பு 2 லட்சமாகத் தான் அதிகரித்து வந்தது. 88 லட்சம் வேலைவாய்ப்பு என்பது குறிப்பிட்ட அளவிலான நபர்கள் வேலை இல்லாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.

சர்வதேச விமான சேவையில் சாதனை படைத்த இண்டிகோ.. ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிலை என்ன?

வேலையிழப்பு

வேலையிழப்பு

கொரோனா தொற்று காலத்தில் பலர் வேலைவாய்ப்புகளை இழந்தது, இந்த ஆண்டு தொடக்கம் முதல் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களை பணியை விட்டு நீக்கியது போன்ற காரணங்களால் வேலையின்மை அதிகரித்து இருந்தது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 12 மில்லியன் நபர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

புதிய வேலைவாய்ப்புகள் எப்படி அதிகம்?

புதிய வேலைவாய்ப்புகள் எப்படி அதிகம்?

இப்போது கொரோனா தொற்று குறைந்து மீண்டும் பல நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைத்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதும் அதிகரித்துள்ளது எனவே ஏப்ரல் மாதம் புதிதாக 88 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தொழிலாளர் எண்ணிக்கை 8.8 மில்லியன் அதிகரித்து 437.2 மில்லியனாக உள்ளது.

துறைவாரியான நிலவரம்
 

துறைவாரியான நிலவரம்

ஏப்ரல் மாத சேவை துறையில் 67 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. தொழில்துறையில் 55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உற்பத்தித் துறையிலும், 40 லட்சம் கட்டுமான துறையிலும் உருவாகியுள்ளது.

விவசாயத் துறை

விவசாயத் துறை

அதே நேரம் 54 லட்சம் வேலைவாய்ப்புகள் விவசாயத் துறையில் ஏப்ரல் மாதம் சரிந்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு அறுவடை காலம் முடிவடைந்தது, கோதுமை உற்பத்தி குறைந்ததும் காரணம் என கூறுகின்றனர்.

கவனம் தேவை

கவனம் தேவை

தின கூலிகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களில் இந்த உயர்வு அதிகமாக இருந்ததால், புதிய தொழில்துறை வேலைகள் சிறந்த தரமாக இருக்க வாய்ப்பில்லை என்று அறிக்கை கூறுகிறது.

வேலையின்மை விகிதம்

வேலையின்மை விகிதம்

இந்தியாவில் வேலையின்மை விகிதம், மார்ச் மாதம் இருந்த 7.60 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதம் 7.83 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) அண்மையில் தெரிவித்து இருந்தது. இந்தியாவில் அதிகபட்சமாக ஹரியானாவில் வேலையின்மை விகிதம் 34.5 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.8 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் ஆறுதல் அளிக்கும் விதமாக 4.1 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

CMIE Report Says India added 8.8 million jobs in April

CMIE Report Says India added 8.8 million jobs in April | இந்தியாவில் ஒரே மாத்தில் 88 லட்சம் வேலைவாய்ப்புகள்.. CMIE தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.