இலங்கையில் கனமழை, வெள்ளம் – இலங்கையில் 600+ குடும்பங்கள் பாதிப்பு

கொழும்பு: இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட தகவலில், “கடந்த சில நாட்களாக இலங்கையின் மேற்கு மற்றும் தென் பகுதியில் கடுமையான மழை பதிவாகியிருக்கிறது. குறிப்பாக, கலுதரா மாகாணம், ரத்னபுரா மாவட்டங்களில் கடுமையான மழையினால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வேகமாக காற்று வீசியதில் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையினால் ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் அதிகமான இடங்களில் உள்ள மக்கள் வேறு இடத்திற்கு இடமாறி வருகின்றனர். வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச உள்ளிட்டோர் பதவி விலகக் கோரி அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து நாடு முழுவதும் பெரிய அளவில் கலவரம் வெடித்தது. மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும் கலவரம் நீடித்தது. மகிந்த ராஜபக்சவின் வீடு உட்பட ஆளும் கட்சி தலைவர்களின் வீடு, அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.