இலங்கையில் இன்று இரவு மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு சட்டப்பிரிவு 16-ன் விதிகளின் கீழ் நாடு முழுவதும் இன்று (16) இரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் தவிர, பொது சாலை, ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது வேறு எந்த பொது கடற்கரையிலும் யாரும் தங்க அனுமதியில்லை.
இலங்கையில் மே 9ம் திகதி வன்முறை வெடித்ததை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
மே 9ம் திகதி இடம்பெற்ற வன்முறையை அடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பௌத்த பண்டிகையான வெசாக் பண்டிகையை இலங்கையர்கள் கொண்டாடுவதற்கு நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக நீக்கப்பட்டது.
இலங்கை வன்முறை சம்பவம் தொடர்பாக 159 பேர் கைது! பொலிஸ் அதிரடி
இந்நிலையில், இலங்கையில் இன்று இரவு மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.