இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் நிவாரண நிதிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்திய நாணயத்தில் ரூபாய் 5 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான காசோலையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம்.காதர் மொகிதீன் சனிக்கிழமை தமிழக தலைமைச் செயலகத்தில் சந்தித்து இதனை வழங்கினார்.