லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் பணவீக்கத்தைச் சமாளிக்க ஊழியர்களுக்குத் தங்கமாக வழக்க தொடங்கியுள்ளனர்.
குறைந்த விலையில் தங்கம்.. வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்..!
யு.கே-வில் தினசரி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும் பவுண்டின் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இப்படியே தொடர்ந்தால் 2022-ம் ஆண்டு பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் என்றும் இங்கிலாந்து வங்கி எச்சரித்துள்ளது.
நாணயம்
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் பிரதான நாணயமாக ரூபாய் உள்ளது. இது போல லண்டனில் பிரதான நாணயமாக பவுண்ட் ஸ்டெர்லிங் உள்ளது. அங்கு உள்ள பெரும்பாலான பரிவர்த்தனைகள் பவுண்டில் தான் நடைபெறும்.
பவுண்ட் மதிப்பு சரிவு
டாலர், இந்திய ரூபாய் என பல்வேறு நாடுகளின் நாணயங்களுக்கு எதிரான பவுண்டின் மதிப்பு சரியும் போது, பணவீக்கம் அதிகரிப்பது தவிர்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே லண்டனில் டேலி மணி என்ற பெயரில் நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேமரூன் பாரி, ஊழியர்க்குச் சம்பளத்தைத் தங்கமாக வழங்க முடிவு செய்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாகவே பவுண்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதுபோன்ற சமயங்களில், வழக்கமான பணம் அதன் வாங்கும் சக்தியை சீராக இழக்கும். அப்போது பணவீக்கத்தை விட தங்கம் மக்களுக்குச் சிறந்த லாபத்தை வழங்கும்.
தினசரி செலவு
லண்டனில் தினசரி செலவு மோசமான சூழலிலிருந்து மிக மோசமான சூழலை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. பவுண்டின் மதிப்பு தினமும் சரிந்து வரும் நிலையில், ஊழியர்களுக்குச் சம்பளத்தையும் பவுண்டில் வழங்குவதில் பயனில்லை. எனவே ஊழியர்களுக்குத் தங்கத்தில் சம்பளமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.
சம்பளமாகத் தங்கம்
முதறட்டமாக, டேலி மணியில் மூத்த ஊழியர்கள் 20 பேருக்குச் சம்பளமாகத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறுவனத்தின் எல்லா ஊழியர்களுக்கும் சம்பளம் தங்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் லண்டனில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் பவுண்டில் தான் நடைபெறும். ஊழியர்களை அதை பவுண்டாக மாற்றி செலவு செய்ய வேண்டும். எனவே ஊழியர்கள் தங்களுக்கு பவுண்ட் அல்லது தங்கம் என இரண்டில் எப்படி சம்பளம் வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம் என கேமரூன் கூறியுள்ளார்.
தங்கம் விலை
யு.கேவில் சென்ற ஆண்டு மே மாதம் 1 கிராம் தங்கம் 42.2 பவுண்டாக இருந்தது. இந்த ஆண்டு அதுவே 47.7 பவுண்டாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 12.76 சதவீதம் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
To Beat Inflation CEO offers to pay Salary in gold
To Beat Inflation CEO offers to pay Salary in gold | ஊழியர்களுக்கு தங்கமாக சம்பளம் வழங்கும் நிறுவனம்.. அசத்தல் அறிவிப்பு!