எதிர்வரும் சில மாதங்கள் கடினமான காலமாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முந்தைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் 2.3 டிரில்லியன் ரூபா வருமானம் எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுக்கான உண்மையான வருவாய் கணிப்பு 1.6 டிரில்லியன் ரூபாயாக அமைந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை நான் பிரதமராக பதவியேற்றேன். அந்த பதவியை நான் கேட்டுப்பெறவில்லை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு, அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இந்தப் பதவியை ஏற்குமாறு என்னை அழைத்தார். ஒரு அரசியல் தலைவர் என்ற ரீதியில் மட்டுமன்றி, இலவசக் கல்வியை அனுபவித்து, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற தேசியத் தலைவர் என்ற வகையிலும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் இன்று(16) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்காகவே இந்த சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், இதனை வெற்றி கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கூறினார்.
2022ம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த பிரதமர், . எதிர்வரும் மாதங்கள் மிகவும் சவாலான காலப்பகுதியாக இருக்கும். இதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் முகங்கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தகவல்களை மக்களுக்கு மறைக்கும் எந்தத் தேவையும் எனக்கு இல்லை. குறுகிய காலத்திற்கு சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்வதாகவும் பிரதமர் கூறினார்.
இலங்கைக்கு நேச நாடுகளின் ஒத்துழைப்பு விரைவில் கிடைக்கும். இதனால் எதிர்வரும் சில மாதங்களில் பொறுமையாக செயற்பட வேண்டுமென்றும் பிரதமர் கூறினார்.
எதிர்க்கட்சி உட்பட ஏனைய கட்சித் தலைவர்களுக்கு தாம் எழுதிய கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ளமை தொடர்பில் இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்காக தேசிய பேரவையொன்றை அல்லது அரசியல் சபையொன்றை அனைத்துக் கட்சிகளினதும் பங்கேற்புடன் ஏற்படுத்துவது அவசியமாகும். அனைத்துத் தரப்புக்களோடும் இணைந்து செயற்படுவதன் மூலம் இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும். காஸ், எரிபொருள் நெருக்கடிகள் இல்லாத தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கக்கூடியஇ ,வரிசைகள் இல்லாத, உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடற்ற நாட்டைக் கட்டியெழுப்புவது தமது நோக்கமாகும் என்றும் பிரதமர் கூறினார்.
கடன் வரையறை 3200 பில்லியன் ரூபா. ஆனால் மே மாதம் இரண்டாவது வாரத்திற்குள் 1950 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, மொத்த இருப்பு 1250 பில்லியன் ரூபாவாகும். திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான அனுமதி வரம்பை ரூபா 3000 பில்லியனில் இருந்து 4000 கோடி ரூபாவாக அதிகரிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேற்று அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நhட்டின் ,அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் இன்று திறைசேரியில் ஒரு மில்லியன் டாலர்களைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது நிதியமைச்சகத்தால் எரிவாயுக்காக செலுத்த வேண்டிய 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கூட செலுத்த முடியாத நிலை நிலுகிறது.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சனைகளும் எண்டு. அடுத்த சில நாட்களில் எரிபொருள்ள போன்ற வரிசைகளைக் கட்டுப்படுத்த சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.
தற்போது நாட்டில் ஒரு நாளுக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உண்டு நேற்று வந்த டீசல் கப்பலால் இன்று முதல் உங்கள் டீசல் பிரச்சனைக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு டீசல் கப்பல்கள், மே 19 மற்றும் ஜூன் 1 ஆம் திகதிகளிலும், இரண்டு பெட்ரோல் கப்பல்களும், மே 18 மற்றும் 29 ஆம் திகதிகளிலும் வர உள்ளன.
இலங்கை கடற்பரப்பில் இன்றுடன் 40 நாட்களுக்கும் மேலாக பெற்றோல் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆகியவற்றைக்கொண்ட மூன்று கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கான கட்டணத்தை வெளிச் சந்தையில் இருந்து டாலர்களைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.