‘கொலாஜன்’ என்ற வார்த்தையைப் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம், இது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆனால் தோல் பராமரிப்பு தவிர, இது உடலில் வேறு எந்த தேவைக்கும் உதவி செய்கிறதா? அப்படியானால், அது என்ன, இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் சில குறிப்பிட்ட உணவுகள் உள்ளனவா?
எலும்புகள், தசைகள், தோல் மற்றும் தசைநாண்களில் காணப்படும் கொலாஜன் மனித உடலில் அதிகளவில் இருக்கும் புரதம் என ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர் கூறுகிறார்.
கொலாஜன் உடலை ஒன்றாக வைத்திருக்கவும், உடலுக்கு வலிமை மற்றும் கட்டமைப்பை வழங்க ஒரு தளத்தை உருவாக்குகிறது,
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, வயதாகும் போது, உடல் குறைந்த கொலாஜனை உற்பத்தி செய்கிறது. இதனால் தோலின் கட்டமைப்பு ஒருமைப்பாடு குறைகிறது. சுருக்கங்கள் உருவாகின்றன, மூட்டு குருத்தெலும்பு பலவீனமடைகிறது.
மாதவிடாய் நின்ற பிறகு, பெண்கள் கொலாஜன் தொகுப்பில் வியத்தகு குறைப்பை அனுபவிக்கிறார்கள். 60 வயதிற்கு மேல், கொலாஜன் உற்பத்தியில் கணிசமான சரிவு இயல்பானது.
சில காரணிகள் உடலில் உள்ள கொலாஜன் அளவைக் குறைக்கலாம் என்றும் நிபுணர் குறிப்பிடுகிறார்:
அதிக சர்க்கரை நுகர்வு
புகைபிடித்தல்
சூரிய ஒளி
ஆட்டோ இம்யூன் கோளாறுகள்
சருமத்தின் “தோற்றம் மற்றும் இளமை” ஆகியவற்றில் உணவு ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது. “கொலாஜன் நிறைந்த உணவுகள் அல்லது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்பது உங்கள் சரும இலக்குகளுக்கு தேவையான அமினோ அமிலங்களை உருவாக்க உதவும்”
கொலாஜனை உருவாக்க உதவும் உணவுப் பொருட்கள்:
– எலும்பு குழம்பு
– கடல் உணவுகள்
– முட்டை
– சிட்ரஸ் பழங்கள்
– பெர்ரி
– ஆர்கானிக் கோழி
– இலை கீரைகள்
– நட்ஸ்
– மிளகுத்தூள்
துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் தாமிரம்’ கொலாஜன் உற்பத்தி செயல்முறைக்கு உதவும் பிற ஊட்டச்சத்துக்கள். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் மிருதுவான சருமத்திற்கு நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“