ஐபோன் அறிமுகம் தொழில்நுட்பத் துறையை புதிய சகாப்தத்திற்கு கொண்டு சென்றது. தற்போது அத்தியாவசிய சாதனமாக ஸ்மார்ட்போன் மாறியுள்ளது. ஆனால், ஆப்பிள் இணைநிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் ஐபோன் சிம் இல்லாததாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
iPod இன் தந்தையாக அழைக்கப்படும் Tony Fadell,சிம் கார்டு இல்லாத சாதனமாக ஐபோன் திகழ வேண்டும் என ஜாப்ஸ் விரும்பியதாக கூறியுள்ளார். இந்த தகவலை பத்திரிக்கையாளர் ஜோனா ஸ்டெர்னுடனான பேட்டியில் ஃபடெல் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சிம் கார்டு இருக்கும் ஐபோன் மீது ஸ்டீவ்வுக்கு ஆர்வம் கிடையாது. அவர், மற்றொரு ஓட்டையை ஸ்மார்ட்போனில் இருந்திட விரும்பவில்லை. ஆப்பிள் ஐபோனில் ஜிஎஸ்எம்மை பொருத்துவது பதிலாக செல் டவர்களுடன் இணைக்க சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என் விரும்பினார்.ஆனால்,சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது ஐபோனுக்கு நிலையானதாக இருக்க முடியாது என்பதை ஜாப்ஸூக்கு புரிய வைக்க வேண்டியது இருந்தது. இறுதியாக, ஆப்பிள் ஐபோன் 4 சாதனம் வெளியானது. ஆனால், அதில் சிம் கார்டு ஸ்லாட் நீடித்தது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் eSIM செயல்பாட்டை வழங்குகிறது ஆனால் இந்த அம்சம் சில நாடுகளில் மட்டுமே உள்ளது.
ஃபிசிக்கல் சிம் கார்டு இல்லாத ஐபோனை உருவாக்குவது ஆப்பிளின் நீண்டக்காள கனவுகளில் ஒன்றாகும். தற்போது கனவு நிஜமாகும் நேரமும் கூடிவந்துள்ளது. ஆப்பிள் 15 ப்ரோ சிம் கார்ட் ஸ்லாட் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகிது.
டெக் ஜாம்பவான் ஆப்பிளின் அடுத்த தயாரிப்பான ஐபோன் 14 இந்தாண்டு இறுதியில் அறிமுகமாகிறது. அதில், பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூ.எஸ்.பி-சி கனக்ட்டர் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நிலையான போர்ட்டாக மாறும் என்ற ஐரோப்பிய ஆணையத்தின் திட்டத்திற்கு இணங்க, ஆப்பிள் தனது ஐபோன்களில் லைட்டிங் போர்ட்-க்கு பதிலாக யூஎஸ்பி சி போர்டலை கொண்டு வருவதற்கான பணிகளை தொடங்கிட திட்டமிட்டுள்ளது.