போர்ட் பிளேர் : ஐ.ஏ.எஸ்., பயிற்சி அதிகாரிகளுக்கு, அந்தமான் நிகோபர் படைப் பிரிவில் ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.ஐ.ஏ.எஸ்., பயிற்சி அதிகாரிகளுக்கு, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ராணுவம் தொடர்பான பயிற்சிக்காக, அந்தமான் நிகோபர் படைப் பிரிவுக்கு, 107 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சென்றுள்ளனர்.முப்படைகளும் இணைந்த ஒரே படைப் பிரிவு அந்தமான் நிகோபர் படைப் பிரிவாகும்.
இங்கு உள்ள 836 தீவுகளை பாதுகாக்கும் பணியில், இந்தப் படைப் பிரிவு ஈடுபட்டு உள்ளது. இங்குள்ள ராணுவ, விமானப் படை, கப்பல் படையின் குழுக்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், கடலோரக் காவல் படையின் பணிகள் குறித்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.இந்தப் படைப் பிரிவின் செயல்பாடு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும், ஐ.ஏ.எஸ்., பயிற்சி அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டதாக, படைப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்ட் பிளேர் : ஐ.ஏ.எஸ்., பயிற்சி அதிகாரிகளுக்கு, அந்தமான் நிகோபர் படைப் பிரிவில் ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.ஐ.ஏ.எஸ்., பயிற்சி அதிகாரிகளுக்கு, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.