காதலனுடன் சென்ற மனைவியை மீட்டுத் தருமாறு கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் தீர்த்தனகிரி கிராமத்தை சேர்ந்தவர் பாரதிதாசன். இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 15ஆம் தேதி கலைமணி தனது தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின் பாரதிதாசன் தனது மாமியாரிடம் தொடர்பு கொண்டு வந்துவிட்டார் என கேட்டுள்ளார். அதற்கு அவர் வரவில்லை என தெரிவித்தார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியின் உறவினர் நண்பர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் தேடி உள்ளார்.
ஆனால், அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை நிலையில் பாரதிதாசனின் செல்போனுக்கு ஒரு ஆடியோ பதிவு வந்தது அதில் கலைவாணி தன் முன்னாள் காதலருடன் சென்று விடுவதாகவும் என்னை தேட வேண்டாம் திரும்ப வர மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மனுவில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.