பாகல்கோட்டையில் பெண் வழக்கறிஞர் மேல் கொடூர தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை விநாயக நகரத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. வுழக்கறிஞரியரான இவர் தனது வீட்டின் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மஹாந்தேஷ் என்பவர் திடீரென சங்கீதாவை கொடூரமாக தாக்கி உள்ளார்.
இதில், படுகாயமடைந்த சங்கீதாவை பொதுமக்கள் பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மஹாந்தேஷை , ஒரு குற்ற வழக்கில் கைது செய்ய போலீசார் சென்றபோது அந்த பெண் வழக்கறிஞர், போலீசாருக்கு மஹாந்தேஷ் வீட்டை காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மஹாந்தேஷ், பெண் வழக்கறிஞர் சங்கீதாவை தாக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மஹாந்தேஷை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM