புதுடில்லி : டி.பி., எனப்படும் காச நோயை, 2025க்குள் முழுமையாக ஒழிக்கும் வகையில், காச நோயாளிகளை தத்தெடுக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
காசை நோயை ஒழிக்கும் வகையில், ‘காசநோயாளிகளுக்கு சமூகத்தின் ஒத்துழைப்பு’ என்ற பெயரில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:காச நோயை 2025க்குள் முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக காச நோயாளிகளுக்கு சமூகத்தின் ஒத்துழைப்பு என்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.காச நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச் சத்து, மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
காச நோய் ஒழிப்பு திட்டம் அல்லது காச நோயாளிகளை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும். இதை மாவட்ட, வட்டார, வார்டு அளவில் செயல்படுத்த வேண்டும்.இந்த திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் இணைந்து காசநோயாளியை தத்தெடுத்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement