'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

“தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை பார்த்து காப்பியடித்து உத்தரப்பிரதேச தேர்தலில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இலவச பேருந்து பயணம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்” என திண்டுக்கல்லில் நடைபெற்ற ஓர் ஆண்டு திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.
தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல்நகரில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
image
அந்தக் கூட்டத்தில் ஆர் எஸ் பாரதி பேசுகையில், “தமிழக முதல்வரின் ஓராண்டு சாதனை ஆட்சியில் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாராட்டுகின்றன. தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து காப்பியடித்து, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க… எச்சில் துப்பியதாக குற்றச்சாட்டு: நடத்துநருடன் சண்டையிட்ட காவலர் சஸ்பெண்டு
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆரம்பமாகி உள்ளது. குறிப்பாக கோடநாடு வழக்கில் தோண்ட தோண்ட புதிய புதிய விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இந்த விவகாரத்தில் எந்தெந்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது மக்கள் மன்றத்திற்கு தெரியவரும். பிள்ளை பிடிக்கும் வேலையை பாஜக-காரர்கள் செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசையை பிடித்து பாஜக-வில் சேர்த்துள்ளனர். அதேபோல் தற்போது திருச்சி சிவாவின் மகனை பிடித்து பாஜக சேர்த்துள்ளனர்.
image
தமிழகத்தில் நிலையான கொள்கை இல்லாமல் பாஜக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தை தூண்டும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசி வருவது சரியல்ல. அவருக்கு எச்சரிக்கை விடுகின்றேன். பழைய திமுக காரன் மீண்டும் வந்து விடுவான். எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணாவைப் பற்றி தவறுதலாக கிருபானந்த வாரியார் பேசினார். இதன் காரணமாக அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது. இதே நிலைமைதான் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கின்றேன்” என பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.