உலக நாடுகளிடையில் பணவீக்கம் மிகப் பெரிய பிரச்சனையாகியுள்ளது. ஏப்ரல் மாதம் நுகர்வோர் விலை குறியீடு 8 ஆண்டு இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
எனவே, இந்த பணவீக்கம் சோப், ஷாம்பு முதல் டிவி, ஏசி வரை எல்லா பொருட்கள் விலையும் உயர்ந்து வருகிறது.
இந்தோனேசியா
உலகின் மிகப் பெரிய பாமாயில் ஏற்றுமதியாளரான இந்தோனேசியா, அண்மையில் அங்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. தொடர்ந்து உலக நாடுகள் முழுவதும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்ததுள்ளது.
சோப் முதல் சக்லேட் வரையில்
பாமாயில் சோப், சாம்பு, நூடல்ஸ், பிஸ்கேட் மற்றும் சாக்லேட் போன்றவற்றை செய்ய பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இப்போது பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளதால், அது இந்த பொருட்களின் விலை அதிகரிக்கக் காரணமாகி வருகிறது.
இந்துஸ்தான் யூனிலீவர்
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தங்களது தயாரிப்புகள் மீதான விலையை 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சன் சில்க் ஷாம்பு 100 மிலி பாட்டில் விலை 8 முதல் 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கிளீனிக் ஷாம்பு விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குளியல் சோப்பு விலை 3.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. லக்ஸ் சொப் விலை 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. க்ளோவ் அண்ட் லவ்லி விலை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. பாண்ட்ஸ் டால்கம் விலை 5 முதல் 7 சதவீதம் விலை உயருகிறது.
சர்ப் எக்சல்
சர்ப் எக்சல் நிறுவனம் விலை ஜனவரி மாதமே 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதமும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ஏற்கனவே தங்களது தயாரிப்புகள் மீதான விலையை 3 முதல் 20 சதவீதம் வரையில் உயர்த்தியது.
டிவி, வாஷிங் மெஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டி
ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் டிவி, வாஷிங் மெஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால், ஜூன் மாதம் முதல் விலை உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறைந்தது 3 ம்னுதல் 5 சதவீதம் வரை விலை உயர்த்தப்படலாம் என கூறுகின்றனர்.
பீட்சா
ரஷ்யா – உக்ரைன் போரை தொடர்ந்து டாமினோஸ் பீட்சா நிறுவனம் சென்ற 5 மாதங்களில் 2 முறை விலையை உயர்த்தியுள்ளது. 15 சதவீதம் வரை பீட்சாவின் விலையை உயர்த்தியுள்ளனர்.
Reasons To Soap, Shampoo, TV, AC And Other Products Prices Hike
Reasons To Soap, Shampoo, TV, AC And Other Products Prices Hike | சோப், ஷாம்பு முதல் டிவி, ஏசி வரை எல்லாம் விலை ஏறும்.. என்ன காரணம்?