செல்ஃபி மோகத்தால் கேரளாவில் 16 வயது மாணவி ரயில் மோதி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த நபாத் பதாக் (16) மற்றும் அவரது ஆண் நண்பர் இசாம் ஆகிய இருவரும் பரோக் ரயில்வே பாலத்திற்கு சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டுனர்.
அப்போது அவர்கள் இருவரும் தங்களது செல்ஃபோனில் செல்ஃபி எடுத்தனர். அந்த நேரத்தில் வந்த மங்கலாபுரம் – கோவை விரைவு ரயிலின் பக்கவாட்டு பகுதி அவர்கள் இருவர் மீதும் மோதியது.
இதில் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆண் நண்பர் இசாம் கை, கால்களில் பலத்த காயங்களுடன் தண்டவாளப் பகுதியில் தூக்கி வீசப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோழிக்கோடு ரயில்வே போலீசார் இசாமை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செல்ஃபி மோகத்தால் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என்று அரசு உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில் இதுபோன்ற படித்த இளைய சமுதாயமே, விழிப்புணர்வு இன்றி செல்ஃபி மோகத்தால் உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
newstm.in