தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்திருப்பதால் போதிய விழிப்புணர்வு அவசியம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பு அறிக்கையில், பிப்ரவரி மாதம் முதல் மாநிலம் முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், பெரியவர்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 5-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், நீரிழிவு போன்ற இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் சிறுநீரக பரிசோதனை செய்து கொள்வதோடு தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.