தமிழகத்திலில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாட்களில் முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களும் நிறைவடைகிறது.
இந்த 57 இடங்களுக்கும் வரும் ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
வேட்பு மனுக்களைத் தாக்கல் மே 24ஆம் தேதி முதல்.,
வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மே 31ஆம் தேதி.
வேட்புமனு பரிசீலனை ஜூன் 1, வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் ஜூன் 3 ஆம் தேதி.
ஜூன் 10ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.
அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் 24.05.2022 முதல் 31.05.2022 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.