புதுடெல்லி:
இந்தியாவில் புதிதாக 2,202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 2,858 ஆக இருந்தது. நேற்று 2,487 ஆக குறைந்த நிலையில் இன்று மேலும் சரிந்துள்ளது.
டெல்லியில் 613, கேரளாவில் 428, அரியானாவில் 302, மகாராஷ்டிரத்தில் 255, உத்தரபிரதேசத்தில் 153, கர்நாடகாவில் 126 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 23 ஆயிரத்து 801 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் மேலும் 27 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் 22 மரணங்கள் சேர்க்கப்பட்டதும் அடங்கும்.
இதுதவிர நேற்று டெல்லியில் 3 பேர், மகாராஷ்டிரா, ஜம்முகாஷ்மீரில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,241 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2,550 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 82 ஆயிரத்து 243 ஆக உயர்ந்தது.
தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 17,317 ஆக குறைந்துள்ளது. இது நேற்றை விட 375குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 3,10,218 டோஸ்களும், இதுவரை 191 கோடியே 37 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று 2,97,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.41 கோடியாக உயர்ந்துள்ளது.