“சொன்னது தப்பு..தப்பு..போதுமா..”- அம்மா எரிச்சலோடு சொல்ல
“ஏம்மா காலையிலே ஆரம்பிச்சிட்டியா..”ஆபீஸ் போகும்
அவசரத்தில் விக்னேஷ் கேட்க..
“பின்ன என்ன…எவ்வளவு முக்கியமான விஷயம் பதில் சொல்லாம
போனா என்ன அர்த்தம்…?”
“சாதாரண விஷயம் அது..”
“நமக்குள்ள எதுக்கு இப்ப விவாதம்.. அப்பாகிட்ட கேப்போம் வா..”
பேப்பர் படித்துக்கொண்டே தூங்கிப் போனவரை எழுப்பி
“இதுக்கு ஓரு தீர்வு சொல்லுங்க என்றதும்..” கொட்டாவி வீட்டுக்
கொண்டே அவர் “மாமியார் மருமகள் பிரச்சனை பற்றி
அவங்கிட்ட இப்ப எதுக்கு பேசணும்..?”
“வேற யார்கிட்ட பேச முடியும்..?” அம்மா பதிலடி கொடுத்ததும்
“கேட்டுத் தொலையெண்டா..”அப்பா பொறுமையிழந்து
கத்த..
“அல்ப விஷயம் அதுக்கு போயி ஏன் மாமியார் மருமகள்
சண்டை போடணும்.. பிரெண்ட்லியா அவங்களுக்குள்ள பேசி
தீத்துக்கிறாங்கன்னு சீன் எழுதினா. .மெகா சீரியல்ல இப்படி
வரக்கூடாதுன்னு பழைய பல்லவி பாடுறாங்க… திருந்த
மாட்டேங்கிறாங்க..”சொல்லிவிட்டு கிளம்பினான் வசனகர்த்தா
நவீன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.