பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். தெரிந்தவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ கடன் கொடுத்து விட்டு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.
இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அது மட்டும் அல்ல அந்த பணத்தினை எப்படி திரும்ப பெறுவது என்பது தெரியாமல் கடைசி வரையில் வசூல் செய்ய முடியாமல் விட்டு விடுகின்றனர்.
இதனால் பல குடும்பங்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதெல்லாம் சரி இதனை தீர்த்துக் கொள்ள வழியே இல்லையா? என்று புலம்புபவர்களுக்கு தான் இந்த பதிவு.
கடன் வாங்கிவிட்டு தப்பி ஓட்டம்
சில சமயங்களில் வங்கிகளில் கடன் வாங்கியவர்களே திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி, வெளி நாட்டுக்கு தப்பி செல்வது தொடர் கதையாகி வருகின்றது. ஆக அப்படி இருக்கும்போது தெரிந்தவர்களுக்கு கடன் கொடுக்கும்போது யோசிக்க வேண்டாமா? குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இதுபோன்ற கடன்களின் எண்ணிக்கை மிக அதிகம் எனலாம்.
ஆவணங்கள் எதுவும் இல்லை
அவசர தேவைக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கடன் தருகிறோம். அப்போது எந்த உறுதி மொழி பத்திரமும் வழங்குவதும் இல்லை, எழுதி வாங்குவதும் இல்லை. இப்படிபட்ட சூழலில் திரும்ப வாங்குவதும் கடினமாகிறது. ஆக கொடுக்கும்போதே, இது போன்ற ஆவணங்களை பெறுவது நல்லது.
ஆன்லைன் வழியாக பணம் கொடுக்கணும்
சில சமயங்களில் கடனை வாங்கி விட்டு, அதனை திரும்ப கொடுக்காமல் காவல் நிலையம் வரை செல்லும் சூழலும் உருவாகலாம். இதுபோன்ற சூழலில் கடன் வாங்கியவரே பணம் கொடுத்ததற்கு என்ன சாட்சி இருக்கா என்று, மனசாட்சியே இல்லாமல் கேட்பார்கள். ஆக இதுபோன்ற சூழலில் நீங்கள் கொடுக்கும் பணத்தை ஆன்லைன் வழியாக கொடுக்கலாம்.
வழக்கு தொடரலாம்
இதற்கிடையில் நீங்கள் பணம் கொடுப்பதை தொலைபேசி வழியாகவும் முடிந்தால் பதிவு செய்யலாம். இதில் வட்டி நோக்கத்தில் கொடுக்கவில்லை என்பதையும் உறுதி செய்திருக்க வேண்டும். அப்படி நீங்கள் உதவி செய்திருக்கும்பட்சத்தில், ஒப்பந்தசட்டம் 1872ன் வழக்கு தொடரலாம். இதில் உள்ள உட்பிரிவு 2 ஹெச்-ன் படி செயல்படுத்தக் கூடிய ஒவ்வொர் உடன் படிக்கையும், வாக்குறுதி என்பதும் ஒப்பந்தமாகும். ஆக இதன் படி சிவில் கோர்ட்டில் வழக்க தொடர முடியும். ஆக உங்களிடம் கடன் வாங்கியவர் மீது வழக்கு தொடர முடியும்.
மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க கூடாது?
எனினும் இதில் கவனிக்க வேண்டிய பிரச்சனையும் உள்ளது. பணம் வாங்கியவர் மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்க கூடாது. சுயமாக எதையும் சிந்தித்து செயல்பட முடியாதவராக இருந்தால் அவர்களுக்கு கொடுக்க கூடாது. அப்படி கொடுத்த பணத்தை திரும்ப கேட்கவும் முடியாது. ஆக எதையும் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படவேண்டும்.
Lending to someone you know and not being able to repay? Things to look out for
Do you suffer from not being able to get after giving credit to acquaintances. How to get it back?