பொதுவாக மழைக்காலம் தொடங்கி விட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நிற்கும்.
ஒவ்வொருவருக்கும் தினமும் ஒருமுறையாவது தும்மல் வரும். ஆனால் அந்த தும்மல் தொடர்ச்சியாக வரும் போது சற்று அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.
இதனை ஒரு சில எளிய சிறந்த வீட்டு வைத்தியங்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை இங்கே பார்ப்போம்.
- ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் தொற்று , அலர்ஜி இருந்தாலும் குணமாகும். தினமும் சாப்பிட்டு வாருங்கள்.
- பெரிய நெல்லிக்காய் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. தினமும் சாப்பிட்டு வர தும்மல் குறையும்.
- ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை வாயில் போட்டு மென்று வர சளி, அலர்ஜி குணமாகும். இதனால் தும்மலும் குறைந்துகொண்டே வரும்.
- இஞ்சியை கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்துவர தும்மல் குறையும்.
- துளசி இலைகளை மென்றும் சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து தூங்கும் முன் 2-3 நாட்களுக்கு குடித்து வாருங்கள்.
- ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட தும்மல் குறையும்.
- முசுமுசுக்கை இலையை சுத்தம் செய்து அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து தோசை செய்து காலை நேரம் சாப்பிட இடை விடாத தும்மல் குணமாகும். 1 கிராம் சித்தரத்தை பொடியை அரை லிட்டர் பாலை கால் லிட்டர் பாலாக கட்டியாக காய்ச்சி 2 வேளை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
- தூதுவளை இலையை நன்கு காய வைத்து மிளகையும் சேர்த்து நன்கு பொடியாக்கி அந்த பொடியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் தும்மல் குறையும். தூதுவளை பொடி, மிளகு பொடி, தேன் அல்லது பாலில் கலந்து குடிக்க தும்மல் நிற்கும்.