பணவீக்கத்தால் வாடும் இந்திய மாநிலங்கள்.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?!

இந்தியாவின் ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தரவு மே 12 அன்று அரசு வெளியிட்டது. இதில் நாட்டின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த 95 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சுமார் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 2-6 சதவீத அளவீட்டின் உச்ச வரம்பை விட அதிகம் மட்டும் அல்லாமல், பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாக 6 சதவீதத்திற்கு மேல் உள்ளதால் உணவு பொருட்கள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

அப்போ மாநிலங்களின் நிலைமை..?

எஸ்பிஐ பங்கு குறித்து நிபுணர்களின் முக்கிய கணிப்பு.. மார்ச் காலாண்டு முடிவையடுத்து நல்ல அறிவிப்பு!

இந்திய பணவீக்கம்

இந்திய பணவீக்கம்

ஒட்டுமொத்த இந்தியாவின் பணவீக்கம் 7.79 சதவீதமாக இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநிலத்தின் பணவீக்கமும் தத்தம் வளம், வர்த்ததம், பயன்பாட்டு ஆகியவற்றைப் பொறுத்து மாறுப்படுகிறது. இந்த வகையில் சுமார் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

7.79 சதவீத பணவீக்கம்

7.79 சதவீத பணவீக்கம்

குறிப்பாகப் பல மாநிலத்தில் இந்தியாவின் 7.79 சதவீத பணவீக்கத்திற்கும் அதிகமாகவே உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதேவேளையில் பல மாநிலத்தில் 6 சதவீதத்திற்குக் கீழ் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?

மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம்
 

மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம்

மத்திய அரசின் தரவுகள் அடிப்படையில் ஏப்ரல் மாதம் மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தில் பணவீக்கத்தின் அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 9 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகியவை இந்திய சராசரி அளவை கட்டிலும் அதிகமாக 8 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

மனிப்பூர்

மனிப்பூர்

இப்படி ஒருபக்கம் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் அதிகப்படியான பணவீக்கத்தில் கடுமையாகப் பாதித்து வரும் நிலையில், மறுபுறம் மணிப்பூரில் வெறும் 2.29 சதவீத பணவீக்கம் மட்டுமே உள்ளது.

கோவா

கோவா

மனிப்பூர்-க்கு அடுத்தாகக் கோவா-வில் ரீடைல் பணவீக்கம் 4.01 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. கோவா மாநிலத்தைத் தொடர்ந்து அடுத்த 3 இடத்தைப் பிடிப்பது தென் மாநிலங்கள் என்பது கூடுதல் சிறப்பு.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா

கேரளா 5.10 சதவீதம், தமிழ்நாடு 5.4 சதவீதம், கர்நாடகா 6.3 சதவீதம், ஹிமாச்சல் பிரதேசம் 6.5 சதவீதம், டெல்லியில் 6.6 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் அதிகப்படியான இலக்கான 6 சதவீதத்திற்குக் கீவ் தமிழ்நாடு உள்ளது மிகவும் முக்கியமான விஷயம்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

எரிபொருள் விலை, சமையல் எண்ணெய் விலை, ஏற்றுமதி, இறக்குமதி, முக்கிய உணவு பொருட்களின் அனைத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதும் தமிழ்நாட்டின் பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைக் காட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

CPI Inflation: 26 states, UT facing more 6% infaltion; Check TamilNadu Status

CPI Inflation: 26 states, UT facing more 6% infaltion; Check TamilNadu Status பணவீக்கத்தால் வாடும் இந்திய மாநிலங்கள்.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?!

Story first published: Monday, May 16, 2022, 13:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.