கொரோனா ஊரடங்கு காலத்தில் முடங்கிப்போன பின்னலாடை தொழில் தற்போது நூல் விலை உயர்வு காரணமாக மேலும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த கடையடைப்பு போராட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபடும் நிலையில், இதன் மூலம் ஏறக்குறைய ரூ. 10 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/fri3laEMH5
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 16, 2022
இதேபோல கரூரில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். நூல் விலையை குறைக்கக்கோரி இந்த வேலைநிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.